``புதைத்த பிணங்களை காணவில்லை! '' - போலீசுக்கு ஷாக் கொடுத்த கிராம மக்கள்

x

``புதைத்த பிணங்களை காணவில்லை! '' - போலீசுக்கு ஷாக் கொடுத்த கிராம மக்கள்


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை என போலீசாரோடு கிராம மக்கள் வாதிட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூத்தாம்பட்டி கிராமத்தில் உயிரிழந்தவர்களை புதைக்க சென்ற மக்களுக்கு சுடுகாட்டில் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுடுகாட்டில் ஆங்காங்கே ஆழமாக தோண்டப்பட்டு மண் அள்ளப்பட்டு இருந்துள்ளது. மண் மட்டுமல்ல அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலங்களையும் மண் கொள்ளை கும்பல் எடுத்துச் சென்றிருக்கிறது. சுடுகாட்டில் சமீபத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை வெளியே எடுத்துப் போட்டு மண் அள்ளப்பட்டிருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் கடும் கோபம் கொண்டனர். இரவு நேரத்தில் மண் கொள்ளையில் ஈடுபட்டவர்களே இந்த அக்கிரமத்தை செய்திருப்பதாக ஆதங்கம் தெரிவித்தனர். அங்குவந்த போலீசாரிடம், புதைத்த பிணங்களை காணவில்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்த போது, 6 பிணங்களை காணவில்லை, இந்த அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். கிராமத்தில் புதைக்கப்பட்டிருந்த பிணங்களை காணவில்லை என்ற தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்