விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : இயற்கை வண்ண கலவை கொண்டு தயாரிப்பு

விநாயகர் சதூர்த்தியையொட்டி தர்மபுரி அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : இயற்கை வண்ண கலவை கொண்டு தயாரிப்பு
Published on

பழைய தர்மபுரி, அதியமான் கோட்டை, சவுளூர் உள்ளிட்ட பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தை சேந்தவர்கள் பலவிதமான விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். ரசாயன பூச்சுக்கள் இல்லாமல் இயற்கை

முறையில் தயாரிக்கப்படும் வண்ண கலவைகள் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். பல வடிவங்களில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் 30 முதல் 6000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக சிலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர் . உற்பத்தி பொருட்கள் விலை உயர்வால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com