Dharmapuri Road Issue அள்ள அள்ள கையோடு வந்த புது `தார் ரோடு’ - நெஞ்சம் கொதித்து விரட்டியடித்த மக்கள்
Dharmapuri Road Issue அள்ள அள்ள கையோடு வந்த புது `தார் ரோடு’ - நெஞ்சம் கொதித்து விரட்டியடித்த மக்கள்
தரமற்ற தார் சாலை அமைக்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு தர்மபுரி மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலை, ஒரே நாளில் கையோடு பெயர்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட வாகனங்களை விரட்டி அடித்தனர். இப்பகுதியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், பழுதடைந்திருந்த சாலையை தோண்டி ஜல்லிகளை கொட்டி, புதிய சாலை அமைக்காமல், பழைய சாலையின் மேல் தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தார் சாலையை வெறும் கைகளால் பெயர்த்து எடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
