Dharmapuri | சுருண்டு விழுந்து கொத்து கொத்தாக மடியும் உயிர்கள் - தர்மபுரியில் அதிர்ச்சி
Dharmapuri | சுருண்டு விழுந்து கொத்து கொத்தாக மடியும் உயிர்கள் - தர்மபுரியில் அதிர்ச்சி தர்மபுரி மாவட்டத்தில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மழலையர் பிருந்தாவன் பூங்கா பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காகங்கள் பறக்கவோ நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்து உயிருக்குப் போராடி கொண்டும் உள்ளன. இதனால், பறவைக் காய்ச்சல் பரவியிருக்குமா என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன் உடனடி ஆய்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
