இரு குடும்பத்திற்கு இடையே பயங்கர தகராறு.. வலை விரித்த போலீஸ் - அதிர்ச்சி

பென்னாகரம் அருகே இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சிகரல அள்ளியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இருவர் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஞானசேகரனை, தங்கராஜ் குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். மேலும் அவரது வீட்டையும் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தங்கராஜை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை தேடி வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com