தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளை தத்தெடுக்க உத்தரவு - தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்படுத்தினார்

பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் தத்தெடுக்க வேண்டும் என்ற உத்தரவை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்படுத்தியுள்ளார்.
தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளை தத்தெடுக்க உத்தரவு - தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்படுத்தினார்
Published on

பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் தத்தெடுக்க வேண்டும் என்ற உத்தரவை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளை, கல்வித்துறை அலுவலர்கள் தத்தெடுத்து, தங்களது நேரடி கவனத்தை செலுத்தி, பள்ளிகளின் தரத்தை முன்னேற்ற வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தேர்ச்சி வீதம் குறைந்த அரசு பள்ளிகளை தத்தெடுக்குமாறு, கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் குறைந்த தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை, மாவட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர், அரசு பள்ளிகளை தத்தெடுக்க உள்ளனர். 75 விழுக்காட்டிற்கும் குறைவான அரசு பள்ளிகள் தத்தெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com