திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் - என்ன காரணம்?

x

விடுமுறை நாளையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை முதல் கோயிலில் குவிந்த பக்தர்கள், கடலில் புனித நீராடி முருகப்பெருமானை தரிசித்தனர். குடமுழுக்கு விழா நிறைவடைந்த 30 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்