மலைநாச்சி அம்மன் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

x

ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி சிவகங்கை மாவட்டம் பிரான்பட்டியில் உள்ள மலைநாச்சி அம்மன் கோயிலில், அகல் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலைநாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மின்னொளியில் ஜொலித்த மலைநாச்சி அம்மன் கோயிலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்த நிலையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்