நாளை நிறைவு பெறும் மண்டல பூஜை-திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
வார விடுமுறையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மண்டல பூஜை திங்கள்கிழமை நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
Next Story
