அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்.. பற்றி எரிந்த பஞ்சு குடோன் - அலறி ஓடிய மக்கள் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாய ஆலை பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கரைப்புதூரில் பூபதி என்பவருக்கு சொந்தமான சாய ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், குடோனில் ஏராளமான சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்து ஒவ்வொரு சிலிண்டராக வெடித்ததால் அங்கு வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Next Story
