Gas Cylinder Shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் தட்டுப்பாடு | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்
Gas Cylinder Shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் தட்டுப்பாடு | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ் #gascylindershortage #lpgshortage #LPG #centralgovt #thanthitv சிலிண்டர் தட்டுப்பாடு-மத்திய அரசு விளக்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் பெட்ரோலிய அமைச்சக இணை செயலாளர் சுஜாதா ஷர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகளாவிய சூழ்நிலையால் இயற்கை எரிவாயு இறக்குமதி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் தினசரி இயற்கை எரிவாயு தேவையான 189 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டரில், 97.5 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர் உள்நாட்டில் உற்பத்தியாகிறது என்றும், மீதமுள்ள இறக்குமதி விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க மாற்று நாடுகளில் இருந்து LNG கொள்முதல் செய்யப்படுவதாகவும், இரண்டு LNG கப்பல்கள் இந்தியாவை நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்... வீட்டு பயன்பாட்டிற்கு LPG உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். PNG, CNG விநியோகம் முழுமையாக தொடரும் என்றும், தொழில்துறைக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயு வழங்கப்படுவதாகவும் கூறினார். தேவையில்லாமல் LPG முன்பதிவு செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், தற்போது சராசரி விநியோக நேரம் இரண்டு முதல் மூன்று நாட்களாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
