CSK தோல்வியை கொண்டாடிய RCB Fan... மது விருந்தில் நண்பர்களுக்குள் அடிதடி...
ஐபிஎல் தொடங்குனதுல இருந்து கிரவுண்ட்க்குள்ள என்ன நடந்துட்டு இருக்குதுனு தான் இத்தனை நாளா நீங்க கவனிச்சுட்டு இருந்திருப்பீங்க...
ஆனா, கிரவுண்டு வெளிய நடந்துட்டு வரக்கூடிய க்ரைம் சீன்ஸோட Highlights இது..
சம்மர் தொடங்கிட்டாலே நம்ம யங்ஸ்டர்ஸ் மத்தில ஐயோ பத்திகிச்சுனு IPL Fever-ம் தொற்றிக்க ஆரம்பிச்சுடும்...
அதிலும் குறிப்பா சேப்பாக்ல நடக்குற மேட்ச்குலாம் நம்ம Yellow Army கொடுக்குற அலப்பறைகளுக்கு ஒரு அளவே கிடையாதுங்க.
கிரௌண்ட்ல விளையாடுற பிளேயர்ஸ்க்கு இருக்குற டென்ஷன விட, அந்த மேட்ச்ச வெளிய இருந்து பார்க்குற CSK ஃபேன்ஸுக்கு தான் BP சும்மா 130.. 140..னு ஏறும்...
அதுலயும் ஃபைனல் ஓவர் நெருங்க நெருங்க அவங்களோட Blood Pressure Strike Rate விட எகிறிட்டே போகும்...
இதுல, CSK தோத்துடுச்சுனு வைங்க... அவங்க எந்த.. Extremeக்கும் போவாங்கன்றத நிரூபிச்சிருக்கு இந்த சம்பவம்...
லாஸ்ட் மேட்ச்ல CSK – வோடதோல்விய கிண்டல் செஞ்சி “RCB Back to the Form“-னு ஆட்டம்போட்டவர்ர அடிச்சு வெளுத்திருக்காங்க இங்கொரு கொலைவெறி பிடிச்ச YelloW Boys...
என்ன நடந்துச்சுன்ற முழுக்குற்ற பின்னணியையும் அறிய விசாரணைய தொடங்கினோம்.
சென்ற வெள்ளிகிழமை சேப்பாக் ஸ்டேடியத்துல நடந்த CSK- RCB Match-அ ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்றுநோக்கிட்டு இருந்துச்சு...
ஸ்டேடியத்துல, டிவில, மொபைல்ல, ஹோட்டல்ல, டாஸ்மாக் பார்ல, பப்ளிக்லனு ஒரு இடம் விடாம எல்லா இடத்துலயும் தலதோனி தரிசனத்த தான் ஃபேன்ஸ் பரவசமா பார்த்துட்டு இருந்தாங்க.
அப்படி தான் வேளச்சேரி பகுதிய சேர்ந்த சில இளைஞர்கள் கள்ளுக்குட்டை திருவள்ளூர் நகர்ல ஒன்னா மது அருந்திகிட்டே CSK vs RCB மேட்ச் பார்த்து இருக்காங்க. அந்த Yellow Army-ல ஒரு RCB Fan-ம் இருந்திருக்காரு. அவரோட பேரு ஜீவரத்தினம்.
சட்டையோட கலர்ரயும், ஆளோட பேர்ரயும், பின்னணி இசையையும் வெச்சி கம்யூனிசம் பாடம் எடுத்தாரே அந்த ஜீவரத்தினத்தோட கேரக்டரோன்னு தப்பா நினைச்சிடாதீங்க... இந்த சிகப்பு சட்டை ஜீவரத்தினம் வருஷா வர்ஷம் “ஈ சாலா கப் நம்தே“ முழக்கமிடுற ஆர்சிபி ஃபேன் அவ்வளவு தான் இவருக்கான பில்டப்...
சம்பவம் நடந்தன்னைக்கு 17 வர்ஷதுக்கு பிறகு RCB Chepauk-ல வெச்சி ஹோம் டீம்ம Win பண்ணதால, கொடூரமான மது போதையில இருந்த ஜீவரத்தினம் உற்சாக மிகுதில ஓவர்ர சவுண்டு கொடுத்திருக்காரு. இதனால கடுப்பான அங்கிருந்த மஞ்சள் படை, ஜீவரத்தினத்த அடிச்சு வெளுத்திருக்காங்க.
நடந்த தாக்குதல்ல படுகாயமடைஞ்ச ஜீவரத்தினத்த சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைல அட்மிட் பண்ணி இருக்காங்க.
இந்த சம்பவம் தொடர்பா வழக்குப்பதிவு பண்ண துரைப்பாக்கம் போலீஸ் கல்லுக்குட்டை பகுதிய சேர்ந்த அப்பு, ஜெகதீஷ், ரமேஷ் உள்ளிட்ட அஞ்சு பேர்ர கைது பண்ணி இருக்காங்க.
ஜீவரத்தினத்த தாக்கினதுக்கு வேற ஏதோ மோடீவ் இருக்குதுனு ஆழமா நம்பின போலீஸ் அதுகுறித்து துருவி துருவி விசாரிச்சு இருக்காங்க. அப்போதான் ஜீவாவுக்கும், அப்புவோட மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்த தகவலும், அதனால நண்பர்களுக்குள்ள ஏற்பட்ட மனகசப்பும் தெரியவந்திருக்கு.
ஜீவாகிட்ட தன்னோட மனைவியோட பழக வேண்டாம்னு அப்பு தொடர்ந்து எச்சரிச்சுக்கிட்ட வந்திருக்காரு. ஆனா, ஜீவா ஃபிரெண்ட்ஷிப்ப கைவிடுறதா இல்ல. இதனால் ரெண்டு பேருக்கும் நடந்த ஏற்கனவே இருந்த மோட்டீவ்வோட சிஎஸ்கே தோல்வி வெறியும் சேர அவர்ர கூட்டாளிகளோட சேர்ந்து அடித்து வெளுத்தது விசாரணைல உறுதியாகி இருக்கு.
இது ஒருப்புறம் இருக்க இன்னொரு பக்கம் Chepauk டிக்கெட் சேல்ஸ்ல மிகப்பெரிய Scam நடக்குறதா CSK Fans கொந்தளிக்க ஆரம்பிச்சு இருக்காங்க.
ஆமாங்க, ஆன்லைன் கவுன்டர்ல 2000 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்ட பிளாக் மார்கெட்ல 20000 ரூபாய்க்கு விற்று கள்ளாக்கட்டி இருக்காங்களாம்.
பெரும்பாலும் Booking ஓப்பன் செஞ்ச சில நிமிடங்கள்லயே Sold Out- னு வர்றதால , இதுல ஏதோ Forgery நடக்குதுனு நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி இருக்காங்க.
இந்த சூழல்ல CSK –RCB மேட்ச் டிக்கெட்ட கள்ளசந்தையில விற்ற 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறதா காவல்துறையினரும் தெரிவிச்சு இருக்காங்க. ஆனா, இதெல்லாம் வெறும் கண் துடைப்புனு குற்றம் சாட்டக்குடிய CSK Fans டிக்கெட் Selling System-மே சரியில்ல முதல்ல அத சரி பண்ணுங்கன்னு வலியுறுத்தி இருக்காங்க.
அதுமட்டுமில்லாம, 2300 ரூபாய் Basic Price நிர்ணயிக்கபட்டுள்ள டிக்கெட்க்கு, E Tax, Gst எல்லாம் போட்டு 4000 ரூபாய்க்கு Roundup பண்ணி இருக்கிறதும் இப்ப ஃபேன்ஸ் மத்தியில பேசு பொருளாகி இருக்கு.
அடிப்படை விலைல இருந்து 70 சதவிகிதமா வரி வசுலிக்கிறது? இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையானும் கேள்வி எழுப்பிட்டு இருக்காங்க. ரசிகர்கள் எழுப்பியுள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் கிரிக்கெட் வாரியம் கொடுக்க போகும் விடை என்னவென்பதை குற்றசரித்திரத்தின் அடுத்த இன்னிங்க்ஸில் பார்க்களாம்.
