மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த நண்பரை கொலை செய்தவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயக்குமார் என்பவர் மது அருந்த பணம் தராததால், அவரை, நண்பர் பரமசிவம் சிமெண்ட் கட்டையால் தாக்கி கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை 16 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பரமசிவத்திற்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.