"என் பொண்ண கல்யாணம் பண்ணாதடா.." சைடு கேப்பில் தாலியை கட்டிய காதலன்
திருத்தணி முருகன் கோயிலில் இளம் காதல் ஜோடி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
மணக்கோலத்தில் வந்த காதல் ஜோடி மாலை மாற்றிக் கொண்டு இருந்தபோது, இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, தங்களது மகளை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்வதாக, பெண் வீட்டார் கூச்சலிட்டதாக தெரியவருகிறது. இதனிடையே, சமயம் பார்த்த காதலன், காதலிக்கு தாலியை கட்டினார். இதனால், உறவினர்கள் மாறி மாறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த போலீஸ் விசாரணையில், தனியார் கல்லூரியில் படித்து வரும் பொதட்டூர் பேட்டையை சேர்ந்த உமாபதி என்பவரும், பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரீட்டா என்பதும் தெரியவந்தது. இருவரும் மேஜர் என்பதால், போலீசார் 2 தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
Next Story
