தம்பதி தற்கொலை - இடுகாட்டில் உடல்களை கைப்பற்றி போலீசார் அதிரடி

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கடன் பிரச்சினை சம்பந்தமாக எழுந்த குடும்ப தகராறில், கணவன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்கள், ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம் - உஷா தம்பதி. இந்த தம்பதியினரின் மகன் பூபதி என்பவர் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும், இதனாலேயே அடிக்கடி குடும்ப தகராறு வந்ததாகவும் கூறப்படுறது. இதனால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக, பூபதியின் பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரியவருகிறது. இதையடுத்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கூறாமலேயே, 2 பேரின் உடல்களையும் உறவினர்கள் இடுகாட்டிற்கு அடக்கம் செய்யக் கொண்டு சென்றனர். இதனிடையே, தகவல் அறிந்த பள்ளிப்பாளையம் போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், அவர்களது மகன் பூபதியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்