முறைகேடு வழக்கு - எஸ்.பி வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு

x

முறைகேடு வழக்கு - எஸ்.பி வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு

மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வேலுமணி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயனுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை எனவும் லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்த நிலையில், வழக்கை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்