Cooum | CM Vijay | கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் - CM விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
Cooum | CM Vijay | கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டம் - CM விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
#Cooum #CMVijay #TNGovt #Chennai
சென்னை கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 2026-2027 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, கூவம் ஆற்றை அதன் இயற்கை நிலைக்கு மீட்டெடுக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதிகளில் நடைபாதை, சமூகப் பயன்பாட்டு வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னை மாநகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளிகளை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்த முறையில் விரைந்து முன்னெடுக்க முதலமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
