POCSO Case | DSP | வடமாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை என புகார் - DSP மீது பாய்ந்த போக்சோ வழக்கு
POCSO Case | DSP | வடமாநில சிறுவனுக்கு பாலியல் தொல்லை என புகார் - DSP மீது பாய்ந்த போக்சோ வழக்கு #chengalpattu #dsp #POCSOcase #thanthitv செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் காவலர் பயிற்சி மையத்தில், 16 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் டிஎஸ்பி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மைய வளாகத்தில் உள்ள உணவுக் கூடத்தில் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு, டிஎஸ்பி வசந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார். காவலர் பயிற்சி மைய வளாகத்திலேயே 16 வயது சிறுவன் பணியில் அமர்த்தப்பட்டது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன. சிறுவனைப் பணியில் அமர்த்தியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
