பொறியியல் கல்லூரி மாணவர் கடத்தி கொலை : உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

திருவிடைமருதூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் பணம் கேட்டு கடத்தி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் கல்லூரி மாணவர் கடத்தி கொலை : உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
Published on

திருவிடைமருதூரை அடுத்த ஆவணியாபுரத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் மும்தசர் மயிலாடுதுறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் படித்து வந்தார்.

இந்நிலையில் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு திருவிடைமருதூருக்கு நேற்று இரவு சென்றுள்ளார். இதனிடையே மும்தசரை கடத்தியுள்ளதாகவும், அவரை விடுவிக்க வேண்டுமென்றால் 5 லட்ச ரூபாய் தர வேண்டும் என கடத்தல் காரர்கள் அவரின் குடும்பத்தினரிடம் தொடர்புகொண்டு தொலைபேசியில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான புகாரின் பேரின் விசாரணை மேற்கொண்ட போலீசார், திருப்புவனத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததை கண்டுபிடித்தனர். இரவு முழுவதும் தேடிய நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றுப்பகுதியில் உள்ள புதரில் மும்தசரின் உடல் கழுத்தறுக்கப்பட்டு நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com