Jayalalitha| CM Vijay| ஜெ.வின் புரட்சிக்கர திட்டம்.. தூசி தட்டி எழுப்பி உயிர் கொடுத்த CM விஜய்

ஜெ.வின் புரட்சிக்கர திட்டம்.. தூசி தட்டி எழுப்பி உயிர் கொடுத்த CM விஜய்

ஜெ.வின் புரட்சிக்கர திட்டம்.. தூசி தட்டி எழுப்பி உயிர் கொடுத்த CM விஜய் - தமிழக வரலாற்றில் திருப்புமுனை

#jayalalitha #cmvijay #rainwaterharvesting

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சுமார் 24 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டி, தற்போது அதனை ஒரு மக்கள் இயக்கமாகத் தமிழக வெற்றிக் கழக அரசு முன்னெடுத்துள்ளது... கடந்த 2001-ஆம் ஆண்டு கடுமையான வறட்சியைச் சந்தித்த தமிழ்நாட்டில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் மழைநீர் சேகரிப்பை இணைத்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவசரச் சட்டம் மூலம் கட்டிட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து, 2003ஆம் ஆண்டுக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்காத கட்டிடங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.. புரட்சிகரமான இந்த திட்டத்தால், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 50 சதவீதம் வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் இதே முறையைப் பின்பற்றின. எனினும், காலப்போக்கில் சட்ட அமலாக்கத்தில் ஏற்பட்ட தொய்வு காரணமாக பல கட்டமைப்புகள் பழுதடைந்து செயலிழந்தன. இந்த சூழலில்தான், தவெக அரசு தற்போது பழைய சட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதுடன், அதனை ஒரு மக்கள் இயக்கமாகவும் மாற்றியுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் இணைப்புகள் துண்டிப்பு மூலம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தவெக அரசு அதனை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளது. அதாவது, ஒவ்வொரு கட்டமைப்பும் ஜியோ-டேகிங் மூலம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுவதுடன், வட்டாரம் வாரியாக நீர்மட்டம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழைக்கு முந்தைய ஆய்வுகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாணவர்களை இணைத்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், மற்றும் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு விருதுகள் வழங்குவது போன்ற புதிய முன்னெடுப்புகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து மழைநீர் சேகரிப்பு என அன்று விதைக்கப்பட்ட தொலைநோக்குப் பார்வை, இன்று நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து மீண்டும் உயிர் பெற்றுள்ளது. தவெக அரசின் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இயக்கம், அன்றைய சட்டப்பூர்வக் கண்டிப்புடன், இன்றைய மக்கள் பங்கேற்பும், நவீன தொழில்நுட்பமும் இணைந்து தமிழகத்தின் நீராதாரத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com