புதுக்கோட்டையில் கண்டறியப்பட்ட சோழர்கால சிற்பங்கள் | ஆய்வாளர் சொன்ன முக்கிய தகவல்
11-ஆம் நூற்றாண்டு கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர்கால சிற்பங்கள் மற்றும் கற்றளி கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சைவம், வைணவம், சமண மதங்களைச் சேர்ந்தவை என தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளர் மங்கனூர் மணிகண்டன் தெரிவித்தார். குறிப்பாக இங்கு கண்டறியப்பட்ட மூத்த தேவி சிற்பம் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறிய அவர், இதேபோல 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகன் சிற்பமும், விஷ்ணு சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story
