சிறுமி கடத்தல் - ஆவேசப்பட்டு ஈபிஎஸ் கேட்ட கேள்வி

x

சிறுமி கடத்தல் - எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளிவரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆட்சியில் 10 வயது சிறுமி சாலையில் நடந்து செல்ல முடியவில்லை என்பது குறித்து முதல்வருக்கு வேதனையாவது இருக்கிறதா என்று இபிஎஸ் கேள்வி

எழுப்பியுள்ளார். வன்கொடுமையில் ஈடுபட்டவரை உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறுமிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்