"சாரி கேட்க முடியாது..!"ஒருமையில் பேசிய அரசு பேருந்து ஓட்டுநர்..! கணவருடன் வந்து ரெய்டு விட்ட பெண்..
"சரி கேட்க முடியாது..!"ஒருமையில் பேசிய அரசு பேருந்து ஓட்டுநர்..! கணவருடன் வந்து ரெய்டு விட்ட பெண்..
சென்னையில் பெண் பயணிகளை வாடி, போடி என ஒருமையில் பேசிய அரசுப்பேருந்து ஓட்டுநரால் சலசலப்பு ஏற்பட்டது.
சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்னேரே, ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். இதனால் ஒரு பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதுகுறித்து ஓட்டுநர் தேவராஜிடம், கேட்டபோது, அந்த பெண்ணை போடி.. வாடி.. என ஒருமையில் பேசினார். பக்கத்தில் இருந்த நித்திய பிரியா என்ற பெண், "ஏன் இப்படி பேசுகிறீர்கள்" என கேட்கவே, அவரையும் ஓட்டுநர் போடி... வாடி என பேசினார். இதனால், ஆத்திரமடைந்த நித்திய பிரியா வீட்டிற்கு சென்று, தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்தார். அரசுப்பேருந்தை வழிமறித்து, பேருந்து ஓட்டுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். சம்பவம் அறிந்து வந்த போலீசார் ஓட்டுநரை காவல்நிலையம் அழைத்து சென்றுவிட்டு, சிறிது நேரத்தில் வெளியே விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.