

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டியன். வேலைக்கு செல்லும் இவர், தனது வீட்டை பூட்டி சாவியை வீட்டின் ஜன்னலுக்கு அருகே வைத்து விட்டு செல்வது வழக்கம். இதுபோல் ஒரு நாள் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பிய போது வீட்டின் பீரோவில் இருந்த 5 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போய் இருந்தது.
இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் ஜெகதீஷ் பாண்டியன் வீட்டில் இருந்து வெளியேறும் காட்சி இருந்தது.