இருசக்கர வாகனம் லாரி மோதல் : கல்லூரி மாணவர் பலி

சென்னை அருகே வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மதன்குமார் மகன் அஸ்வின் டேனியல்குமார். மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2 ம் ஆண்டு படித்து வந்தார்.
இருசக்கர வாகனம் லாரி மோதல் : கல்லூரி மாணவர் பலி
Published on

சென்னை அருகே வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த மதன்குமார் மகன் அஸ்வின் டேனியல்குமார். மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2 ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கும் நண்பர் ராகுல் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு இருவரும் திரும்பிக்கொண்டிருந்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடி அருகே வரும்போது, லாரி உரசியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் அஸ்வின் டேனியல்குமார் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலில் படுகாயமடைந்த ராகுல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com