செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது : சூடான் நாட்டை சேர்ந்த ஒருவரும் சிக்கினார்

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சூடான் நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது : சூடான் நாட்டை சேர்ந்த ஒருவரும் சிக்கினார்
Published on
சென்னை கோட்டை ரயில் நிலைய நடைமேடையில் படுத்திருந்த நபர்களிடம் செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அங்கு வந்த ஆயுதப்படை காவலர் தனசேகரன் மற்றும் போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். விசாரணையில் இருவர் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் கணேசன் என்பதும், ஒருவர் சூடான் நாட்டை சேர்ந்த முகமது என்பதும் தெரிய வந்துள்ளது. கஞ்சா பழக்கம் உடைய மூவரும் போதையில் இவ்வாறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தை, அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com