பரபரப்பான சென்ட்ரல் ஸ்டேஷனில் இப்படியும் நடந்துச்சா? -பகீர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதையில் வந்த இளைஞரிடம் இருந்து 6 ஆயிரத்து 890 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தள்ளாடியபடி வந்த இளைஞர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கட்டு கட்டாக வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் அம்பத்தூர் நேரு நகரைச் சேர்ந்த மனோஜ் என்பதும், அம்பத்தூரில் விற்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, 6 ஆயிரத்து 890 மாத்திரைகளை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com