பெசன்ட் நகர் கடற்கரையில் குப்பை போட்ட இளைஞர்கள் : இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலர்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடி, அசுத்தம் செய்த இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பெசன்ட் நகர் கடற்கரையில் குப்பை போட்ட இளைஞர்கள் : இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலர்
Published on

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடி, அசுத்தம் செய்த இளைஞர்களை வரவழைத்து சுத்தம் செய்ய வைத்த காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் எபென் கிறிஸ்டோபர், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் பணியில் இருந்த போது, போலீஸ் பூத் அருகே நடைபாதையில் கேக் வைக்கும் அட்டை பெட்டிகள், கலர் காகிதங்கள் கிடந்தன. இதையடுத்து, அங்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வரவழைத்த காவலர், அவர்களிடம் துடைப்பத்தை கொடுத்து, சுத்தம் செய்ய வைத்தார். பொது இடங்களையும் நமது சொந்த வீடாக கருதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அந்த இளைஞர்களுக்கு அவர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். காவலரின் இந்தச் செயலை உயரதிகாரிகள் பாராட்டினர்.

X

Thanthi TV
www.thanthitv.com