#BREAKING || கொல்ல சதி என ADGP புகார்! நடந்தது என்ன? - DGP பரபரப்பு விளக்கம் | DGP Shankar Jiwal
ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் - டிஜிபி சங்கர் ஜுவால் விளக்கம்
ஏடிஜிபி கல்பனா நாயக் விவகாரம், தமிழக டிஜிபி விளக்கம்.
அலுவலகத்தில் தீவிபத்து நடந்தவுடன் டிஜிபி அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாய்க் புகார் அளித்தார்.
உடனடியாக சென்னை காவல்துறைக்கு அனுப்பினேன்.
எழும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு மாற்றப்பட்டு, 31 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது.
தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் இது தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம்.
அதில் மின் வயரில் மின்கசிவு காரணமாக தான் தீவிபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது,
கெமிக்கல் சோதனையில் ஏதும் எரிக்கப்பட்டதாக தெரியப்படவில்லை
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் எந்த வித ஆதரமாக இல்லை, திட்டமிடப்பட்ட செயல் இல்லை என தமிழக காவல்துறை விளக்கம்
