திருப்போரூர் முருகன் கோவிலில் - சிம்பிளாக நடந்த கலெக்டர் கல்யாணம் - நேரில் வாழ்த்திய அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் திருமணம் எளிமையான முறையில் கோயிலில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மருத்துவர் கெளசிகா, இருவரும் திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அமைச்சர் தா. மோ. அன்பரசன் பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Next Story
