செல்போனை பறித்து சென்ற திருடன்..விரட்டி சென்று பிடித்த நபர் - நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்

செல்போனை பறித்து சென்ற திருடன்..விரட்டி சென்று பிடித்த நபர் - நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்
Published on

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து சென்ற திருடனை, ஒற்றை ஆளாக துரத்திப் பிடித்து தொழிலாளி ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். நாராயணன் என்பவரின் செல்போனை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். தொடர்ந்து அந்த நபரை விரட்டிப் பிடித்த நாராயணன், போலீசிலும் ஒப்படைத்தார். விசாரணையில் செல்போனைத் திருடியது அப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பதும் தொடர்ந்து செல்போன் திருட்டில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது. பிரபாகரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com