Cell Phone Robbery | Dindugul News | செல்போன் கடையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

திண்டுக்கல் நிலக்கோட்டையில் மொபைல் கடை ஒன்றில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கத்தியுடன் புகுந்த மர்ம நபர்கள் 15 லட்சம் மதிப்பிலான 58 போன்கள், எலக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்... அணைப்பட்டி சாலையில் உள்ள மொபைல் கடையில் இத்திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. கடை உரிமையாளர் மாதவன் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருடர்களை தேடி வருகின்றனர். மேலும், நிலக்கோட்டை, கொடைரோடு, வத்தலகுண்டு பகுதிகளில் உள்ள மொபைல் கடைகளை குறிவைத்து தொடர்ந்து திருட்டு நடைபெறுவதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மொபைல் பழுதுபார்ப்போர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் புகார் அளிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com