செல்போன் பறிக்க முயற்சி - இளைஞருக்கு தர்மஅடி

சென்னை பூந்தமல்லியில் செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
செல்போன் பறிக்க முயற்சி - இளைஞருக்கு தர்மஅடி
Published on
சென்னை பூந்தமல்லியில் செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தனியார் கம்பெனி ஊழியர்கள் விஜயகுமார், சாமிகண்ணு இருவரும் வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற அந்த இளைஞரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து இரண்டு செல்போன்களையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com