தமிழக எல்லையில் 10,000 கன அடியை தாண்டும் காவிரி

x

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு திடீர் உயர்வு.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை வினாடிக்கு 4000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது நிலவரப்படி வினாடிக்கு 6500 கன அடியாக அதிகரித்துள்ளது

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 14 ஆயிரத்து 281 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 3960 கன அடியாக உள்ளது. தண்ணீர் திறப்பு 7,256 கன அடியாக உள்ளது.

கபினி அணைக்கு வினாடிக்கு 5113 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. தண்ணீர் திறப்பு 7025 கனஅடியாக உள்ளது.

மொத்தம் இவ்விரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 14 ஆயிரத்து 281 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அந்த நீரானது இன்று காலை 10:30 மணி நிலவரப்படி தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது.

மேலும் தொடர்ந்து நீர்வரத்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்