Dindigul | கட்டி வைத்து கொடூரமாய் அடித்த கும்பல் "கத்திய வச்சி மிரட்டுனாங்க.." - மாணவன் சொன்ன உண்மை

x

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே, பணத்தை திருடியதாக பள்ளி மாணவனை தாக்கிய சம்பவத்தில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சின்ன அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் வெற்றிவேல், அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி, வெற்றிவேலை, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், மோகன், அருள், மணி ஆகியோர் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து 7 ஆயிரம் ரூபாயை திருடியதாகக் கூறி வெற்றிவேலை கட்டி வைத்து தாக்கி வீடியோ பதிவு செய்தனர். இதுகுறித்து தட்டிக்கேட்ட வெற்றிவேலின் உறவினர்களையும் தினேஷ் தரப்பினர் தாக்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்