நடிகர்கள் சூரி, விமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு - ஊரடங்கு உத்தரவை மீறியதால் நடவடிக்கை
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் உள்ளிட்டோர் மீன்பிடித்த படங்கள் வெளியானது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்தது. இந்த நிலையில்
கோட்டாட்சியர் சிவகுமார் நடத்திய விசாரணையில் அவர்கள் இ-பாஸ் இல்லாமல் வந்ததும் ஏரியில் மீன்பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் மீது தொற்றுநோய் பரவும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கிய இடங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான வனத்துறையை சேர்ந்த பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
