Career | திடீரென தாறுமாறாக எகிறிய டிமாண்ட் - இந்த வருசம் இந்த படிப்பு தான் அட்மிஷன்ல டாப்

x

பொறியியல் படிப்புக்கு எகிறிய டிமாண்ட்

பொறியியல் படிப்புகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு வரை பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வது சற்று குறைவாக இருந்தது. அரசு ஒதுக்கீட்டில் இருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்களில், சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் வரை மட்டுமே நிரம்பி வந்தன.

ஆனால் இம்முறை பொறியியல் படிப்பில் மாணவர்கள் மோகம் அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 46 கல்லூரிகளில் 100 விழுக்காடு இடங்கள் நிரம்பியுள்ளன.

75 சதவீதத்திற்கும் அதிகமான கல்லூரிகளில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் நிரம்பிய நிலையில்,

இந்த ஆண்டு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 966 இடங்கள் நிரம்பியுள்ளன.

சுமார் 30 ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் 61 ஆயிரத்து 843 இடங்களும்,

சென்னையில் 47 ஆயிரத்து 302 இடங்களும்,

நெல்லையில் 10 ஆயிரத்து 440 இடங்களு​ம், திருச்சியில் 18 ஆயிரத்து 419 இடங்களும்,

மதுரை 15 ஆயிரத்து 962 இடங்களும் நிரம்பியுள்ளன.

மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 494 இடங்களில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 966 இடங்கள் நிரம்பியுள்ளன. 36 ஆயிரத்து 528 இடங்கள் காலியாக உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்