வழிவிடும் போது 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் - உள்ளே இருந்தவர்கள் நிலை?

x

சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணமூர்த்தி என்பவர் தர்மபுரியில் இருந்து கொடைக்கானலுக்கு குடும்பத்தினரோடு சுற்றுலா சென்ற போது வத்தலகுண்டு பிரதான சாலை பெருமாள் மலைப்பகுதியில் இருந்து வந்த பேருந்து அதிவேகமாக வந்ததால் வளைவில் பேருந்துக்கு வழிவிட முயன்றபோது சாலையில் கிடந்த கற்கள் மீது ஏறி 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில்

சம்பவம் குறித்த விசாரணையில் சாலையோரம் வேகமாக வந்த பேருந்தும், சாலையில் ஓரத்தில் கிடந்த கற்க தான் விபத்திற்கு காரணம் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் உள்ள கற்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்