"தம்பி என அழைக்கலாமா?" மேடையில் கலகலவென பேசிய டி.ஆர்.பாலு
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சி.கே.பெருமாளின் 80-வது பிறந்த நாள் விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சபாநாயகர் அப்பாவு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா மேடையில் பேச தொடங்கிய திமுக எம்.பி. டி.ஆர் பாலு, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷை பார்த்து தம்பி என அழைக்கலாமா? என கேட்டதுடன், இல்லையென்றால் வேறு ஏதாவது போட்டுவிட போகிறார்கள் என்று பேசினார். இதனால் அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.
Next Story
