பஸ் பாஸ் கேட்டு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

உடனடியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500,க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.
பஸ் பாஸ் கேட்டு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
Published on

உடனடியாக பஸ் பாஸ் வழங்கவும், 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியற்றவை என்கிற அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வலியுறுத்தி, நாகையில் பாரதிதாசன் உறுப்பு மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500,க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர். தற்போது நடைபெறும் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன், கிராமப்புறங்களில் இருந்து வரும் தங்களுக்கு இதுநாள் வரை பஸ் பாஸ் வழங்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் , உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com