ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
கட்டிக்குளம் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகளை ஆர்வமுடன் காளைகளை அடக்கி மாடுபிடி வீரர்கள் பரிசுகளை அள்ளி சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் கிராமத்தில் உள்ள திருவேட்டை அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், மதுரை ,தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் போட்டியில் பங்கேற்ற நிலையில், 250க்கும் மேற்பட்ட பிடி வீரர்கள் போட்டியில் களம் இறங்கினர். மூன்று பிரிவுகளாக இறங்கி மாடுபிடி வீரர்கள் சீறி பாய்ந்து வந்த காளைகளை ஆர்வத்துடன் அடக்கியதை போட்டியை காண திரண்ட பொதுமக்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
Next Story
