ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு

x

மதுரை அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரையில் உள்ள ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் மாடுபிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடு வளர்ப்பு கூட்டமைப்பு சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், போட்டியின் போது, வலையாங்குளத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அய்யனார் என்பவர் மாடு முட்டியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்