சில்லு சில்லாய் உடைந்து கிடந்த மாரியம்மன் கோயில் சிலை - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் காணாமல் போன பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் சிலை உடைக்கப்பட்ட நிலையில் மீட்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சிலைகள் கடந்த 17ஆம் தேதி காணாமல் போனதாக ஊர் மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காவல்துறையினர் சிலையை தேடி வந்த நிலையில் காந்திநகர் அடுத்துள்ள வெள்ளாளர்குளம் ஊரின் அருகே குளத்து பகுதியில், உடைந்த நிலையில் காணாமல் போன சிலைகள் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்மக்கள் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று உடைந்த சிலைகளை மீட்டனர். தொடர்ந்து அங்கு சிலைகளை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
