Hosur | வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய விஏஓ.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
வாரிசு சான்றிதழ் வழங்க விவசாயியிடம் 4500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி ஜெயராமன் என்பவர், வாரிசு சான்றிதல் கேட்டு சாலிவாரம் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி காந்தனை அனுகியபோது, அவர் லஞ்சபணமாக 6000 ரூபாய் கேட்டுள்ளார். இதுகுறித்து ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்களை கொண்டு, லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
