சிறுவன் கொலை - உடலை பார்த்து கதறி கதறி அழுத மாணவர்கள்.. மனதை ரணமாக்கும் காட்சி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலிற்கு, சக மாணவர்கள் கதறி அழுதபடி, அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்செட்டியை அடுத்துள்ள, மாவனட்டி கிராமத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் ரோகித், அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில் கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவரது உடலிற்கு சக மாணவர்கள் அழுதபடி அஞ்சலி செலுத்தியது, காண்போர் நெஞ்சை கனக்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்