உரிமை கோராமல் பிணவறையில் இருந்த உடல்கள் - போலீசார் செய்த நெகிழ்ச்சி செயல்
உரிமை கோராத உடல்களை போலீசாரே நல்லடக்கம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் தஞ்சையில் அரங்கேரியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கைபற்றப்பட்டு, யாரும் உரிமை கோராமல் கல்லூரி பிணவறையில் இருந்த 9 பிரேதங்களை, போலீசார் நல்லடக்கம் செய்தனர். 9 சடலங்களும் ராஜகோரி இடுகாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு, சகல மரியாதையுடன் புதைக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான காவல்துறையினர், பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
