Bawaria Gang Case | High Court | பவாரியா கொள்ளையர்கள் வழக்கு | ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில், ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தை, கடந்த 2005ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, அவரது வீட்டில் இருந்து 62 சவரன் நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். இந்த வழக்கில், ஆயுள் தண்டனையை எதிர்த்து ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், நான்கு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, பெரியபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Next Story
