Bar | ViralVideo | QR கோடு ஸ்கேன் செய்ய கமிஷன் -தீயாய் பரவும் வீடியோ.. கொந்தளிக்கும் மதுப்பிரியர்கள்
QR கோடு ஸ்கேன் செய்ய கமிஷன் - தனியார் பாரில் நூதன வசூல் வேட்டை
காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 20 நாட்களாக கியூ-ஆர் கோடு வசதி முடங்கியுள்ளதால், மதுப்பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் அருகிலுள்ள தனியார் பார் உரிமையாளர்கள், ஆன்லைனில் பணம் செலுத்துவோரிடம் 100 ரூபாய்க்கு 10 ரூபாய் கமிஷன் வசூலித்து நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை சட்டவிரோத வசூல் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கும் நிலையில், இது மதுப்பிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
