Bakrid பக்ரீத் பண்டிகை - ரூ.3 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை
வேடசந்தூர் சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.3 கோடி மதிப்பில் ஆடு மற்றும் கோழிகள் விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இங்கு மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க அதிக அளவில் வருகின்றனர். அதன்படி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும், 10 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடு ரூ.10,000 மற்றும் வெள்ளாடு ரூ.8,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
Next Story
