கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே செல்வகுமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் ஆட்டோவை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு அதன் உள்ளே தூங்கியுள்ளார். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு அவரை காவல் நிலையம் வரும்படி அழைத்துள்ளனர். ஆனால், ஆட்டோவில் தூங்கினால் குற்றமா என அவர் கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறி, அவரை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.